Saturday, June 8, 2013

அருண் தம்பிமுத்து, பிள்ளையானுக்கு எதிராக வழக்கு?.

Saturday, June 08, 2013
இலங்கை::ஜனாதிபதியின் ஆலோசகரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான அருண் தம்பிமுத்து, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.
 
வழக்குத் தாக்கல் செய்வதற்கு தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
காணி உரிமை தொடர்பிலான பிணக்கின் அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.தற்போது பிள்ளையான் வசித்து வரும் வீடானது தனக்குச் சொந்தமானது என அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
 
இலக்கம் 91, லேக் வீதி, மட்டக்களப்பு என்னும் விலாசத்தில் அமைந்துள்ள வீட்டில் தற்போது பிள்ளையா
ன் வசித்து வருகின்றார்.
 
குறித்த வீட்டை காலி செய்யுமாறு விடுத்த கோரிக்கையை பிள்ளையான் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும் இதனால் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment