Saturday, June 08, 2013
பீஜிங்::சீனாவின் பீஜியான் மாகாணம் ஜியாமென் கடற்கரை சாலை வழியாக நேற்று விரைவு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஜின்சான் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. வழியில் 500 மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்தின் மேல் பஸ் சென்ற போது திடீரென வெடித்து சிதறியது. பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அவசரமாக வெளியேற முயன்றனர். சிலர் பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியில் குதித்தனர்.
தீயில் சிக்கி பயணிகள் பலர் மரண ஓலமிட்டனர். பஸ்சில் இருந்து தப்பிக்கும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பயணிகள் பலர் பஸ்சுக்குள் விழுந்தனர். நெரிசலில் சிக்கியவர்கள் காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். அதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் பஸ்சில் பயணிகள் இருக்கைகள் உள்பட அனைத்தும் பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் பஸ் எலும்பு கூடாக மாறியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் 47 பேர் உடல் கருகி பலியானார்கள். 40க்கும் அதிகமான பயணிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த பயணிகளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் கருகி இறந்த பயணிகளின் சடலங்களை மீட்டனர். பஸ்சில் இருந்த பயணி ஒருவர் பெட்ரோல் போன்ற ஆயிலை எடுத்து வந்ததால் அதில் கசிவு ஏற்பட்டு பஸ் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பஸ் டீசல் டேங்கரில் கசிவு ஏற்பட்டதாகவும், எண்ணெய் நாற்றம் வந்ததாகவும் சிறிது நேரத்தில் பஸ் வெடித்து சிதறியது என்றும் உயிர் தப்பிய பயணிகள் பீதியுடன் கூறினர். மேலும், தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை வெடி சத்தம் கேட்டது என்று கூறியுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியான பரபரப்பு அடங்குவதற்குள், பஸ் தீப்பிடித்து பயணிகள் கருகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment