Wednesday,June 12, 2013
இலங்கை::யுத்தத்தின் பின்னர் வடக்கிலுள்ள மக்களுடன் நல்லிணக்கதுடன் செயற்படும் முறையை தொடர்பில் அரச உத்தியோத்தர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை தெளிவுபடுத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, இந்தச் செயற்றிட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள மக்களுடன் இணைந்து செயற்படுதல், அவர்களுடனான உறவுகளை கட்டியெழுப்புதல் மற்றும் அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ளுதல் என்பது தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதற்கமைய அடுத்தவாரம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment