Wednesday, June 12, 2013

அமெரிக்க போயிங் சி-17 போக்குவரத்து விமானம் முதலாவதாக இந்திய விமானப்படையில் சேர்ப்பு!

Wednesday,June 12, 2013
சென்னை::உலகின் அதி நவீன மனிதநேய மற்றும் போர் தந்திர நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய வசதியும் திறனும் படைத்த

போயிங் சி-17 பெரிய போக்குவரத்து விமானங்களை அமெரிக்கா தயாரிக்கிறது. இந்த போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவெடுத்தது.

அதன்படி நேற்று, கலிபோர்னியா பாம்டேல் விமானப்படை விமானத்தளத்தில் முறையான சோதனையை முடித்த ஒரு போயிங் சி-17 விமானம் ஒன்று இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய விமானப்படையில் சேர்ந்துள்ள இந்த விமானம் அமைதிப்பணி, பேரிடர் காலங்களில் பொருட்கள் எடுத்து செல்லல், போர் காலங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுதல் என பல்வேறு பணிகளில் ஈடுபடும். இதனால் இந்திய விமானப்படையின் திறன் மேம்படும் என்று விமானப்படை துணை தளபதி எஸ்.ஆர்.கே. நாயார் தெரிவித்தார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment