Wednesday, June 12, 2013

'இந்திய அரசாங்கம் புலிகளின் வேண்டுகோளின் பேரில் எங்கள் மீது திணித்த ஒன்றுதான் 13 ஆவது திருத்தமாகும்: அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Wednesday,June 12, 2013
இலங்கை::இந்திய அரசாங்கம் புலிகளின் வேண்டுகோளின் பேரில் எங்கள் மீது திணித்த ஒன்றுதான் 13 ஆவது திருத்தமாகும். 13ஐ பற்றி பலர் தேவையில்லாமல் விவாதித்து வருகின்றனர்' என இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

 எங்கள்மீது கொண்டுவரப்பட்டு பலாத்காரமாக திணிக்கப்பட்டதும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உருவாக்கப்ப

காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் கல்லூரிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

 13 வேண்டுமா?, 15 வேண்டுமா? அல்லது 20 வேண்டுமா? அதற்கு அப்பாலும் வேண்டுமா? என்பதை  பேசியே தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேசியே தீர்வு காணவேண்டும்.

மக்கள் மத்தியில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை ஏற்படுத்த  வேண்டாம். இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் நமது பணிகள் அமையவேண்டும்.

இந்த மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும். இதுதான் இன்றைய தேவையாகும்' என்றார்
ட்டதும்தான் 13வது திருத்தமாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment