Saturday, June 22, 2013

புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும்: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Saturday, June 22, 2013
இலங்கை::இலங்கையில் யுத்தத்தில் தோற்றதன் பின்னர், எஞ்சியுள்ள  புலிகளின் உறுப்பினர்கள், ஆட்கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்த பின்னர்  புலிகளின் எஞ்சிய தரப்பினர் வெளிநாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.
 
அவர்களால் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் செயற்பாடுகளாலேயே தற்போது அவுஸ்திரேலியா சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.
 
எனவே இந்தசிக்கலில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், அவுஸ்திரேலியா  புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள்  புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ள போதும், அவுஸ்திரேலியா இன்னும் அதனை தடை
செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment