Saturday, June 22, 2013

பத்து கிலோகிராமுக்கும் அதிகமான தங்காபரணங்களுடன் ஐந்து இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் கைது:- ஆஸ்திரேலியாவுக்கு படகில் ஆட்கள் கடத்த முயன்ற நால்வரிடம் விசாரணை!

Saturday, June 22, 2013
சென்னை::சுமார் பத்து கிலோகிராமுக்கும் அதிகமான தங்காபரணங்களுடன் ஐந்து இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் துபாயிலிருந்து பதுடில்லி ஊடாக சென்னை நோக்கி சட்டவிரோதமாக தங்காபரண தொகையை கடத்திச் கடத்தி வந்தனர்,

இந்திய நாணயப் பெறுமதியில் சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான தங்காபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபர்கள் தமது பயணப் பொதிகளில் தலா 94 தங்கக் கட்டிகளை மறைத்து கொண்டு சென்றதாக  தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஏனையோரையும் கைதுசெய்வதற்கான விரிவான விசாரணைகளை இந்திய பாதுகாப்புத் தரப்புகள் ஆரம்பித்துள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக  கைதான இலங்கை சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது...

ஆஸ்திரேலியாவுக்கு படகில் ஆட்கள் கடத்த முயன்ற நால்வரிடம் விசாரணை!

நாகப்பட்டினம்::நாகையில் இருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, ஆட்கள் கடத்த முயன்ற நான்கு பேரை பிடித்து, கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்குப் பயன்படுத்த இருந்த விசைப்படகு, பறிமுதல் செய்யப்பட்டது. நாகை அருகே, வேளாங்கண்ணியில் இருந்து, ஆஸ்திரேலியா நாட்டிற்கு விசைப்படகு மூலம், ஆட்கள் செல்ல இருப்பதாக, கியூ பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார், நாகை மீன்பிடித் துறைமுகத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த விசைப்படகை, பறிமுதல் செய்தனர். விசாரணையில், நாகை அடுத்த செருதூரைச் சேர்ந்த, செந்தில், 35, தமிழ்ச்செல்வன், 40, ஆகியோருக்குச் சொந்தமான, எம்.எப்.பி., 888 என்ற விசைப்படகை, ஏஜென்டுகளான மதுரையைச் சேர்ந்த உமா ரமணன், புதுச்சேரியைச் சேர்ந்த பாபு ஆகியோருக்கு, விற்பனை செய்துள்ளனர்.

ஏஜன்ட்கள் உத்தரவுப்படி, விசைப்படகில், 60 பேர் அமரக் கூடிய வகையில், படகின் உட்புறத்தை வடிவமைத்து, 5,000 லிட்டர் டீசல், 15 நாட்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றி வைத்துள்ளனர். விசைப்படகு உரிமையாளர்கள் இருவர், வேளாங்கண்ணியில் தங்கியிருந்த, ஏஜென்ட்கள் இருவர் என, நால்வரை கியூ பிரிவு போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment