Saturday, June 22, 2013

மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வாக அமையும்: பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்!

Saturday, June 22, 2013
சென்னை::நாடாளுமன்ற தேர்தல் பணி துவக்க விழா நிகழ்ச்சி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பாஜ  மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்  பேசியதாவது:
 
தமிழகத்தில் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டணி முடிவாகும். இந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி பெரிய அளவில் போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளம் தாமரை மாநாடு கோவை யில் நரேந்திரமோடி தலைமையில் நடந்தப்படும். மத்திய காங்கிரஸ் அரசின் ஊழல்களையும் கண்டித்து வரும் 28ம் தேதி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்.
 
திராவிட கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதால் தமிழகத்தில் பாஜ வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், கச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment