Saturday, June 22, 2013

புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் கார்டிப் மைதானத்தினுள் பிரவேசித்த அறிக்கை கோரல்!

Saturday, June 22, 2013
இலங்கை::புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் கார்டிப் மைதானத்தினுள் பிரவேசித்த அறிக்கை கோரல்!
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற வெற்றியாளர் கிண்ண அறையிறுதி போட்டியின் போது, புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் மைதானத்தினுள் பிரவேசித்து குழப்பம் ஏற்படுத்தினர்.
 
இது குறித்து  இலங்கை, பிரித்தானியா அரசாங்கத்திடம் இருந்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.
 
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தின் மூலம், இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கான பாதுகாப்பினை உரிய வகையில் வழங்கவில்லை என்று உறுதியாகி இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment