Saturday, June 22, 2013
இலங்கை::நெடுந்தீவில் 100 மில்லியன் நிதியுதவியுடனான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நெடுந்தீவுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நெடுந்தீவை சென்றடைந்த அமைச்சர் அவர்களை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலர் சிறி, நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் தானியேல் றெக்சியன் (ரஜீவ்), ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஆகியோர் வரவேற்றனர்.
முன்பதாக கடற்படையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்பு கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்கள் பொது விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை, முன்பள்ளி, சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல்லை நாட்டி வைத்த அதேவேளை புதிய பாதை போன்றவற்றுக்கான புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தும், மற்றுமொரு புனரமைக்கப்பட்ட பாதையைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காகவும் கையளித்தார்.
இதனிடையே நெடுந்தீவு மக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் குடிநீர்க்கிணறுகளைப் பார்வையிட்ட அவர் அவற்றின் பராமரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீவகத்தின் வேலணை, ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக தலா 100 மில்லியன் வீதம் 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
அந்தவகையில் நெடுந்தீவிற்கென ஒதுக்கப்பட்ட நிதியினூடாக 42 அபிவிருத்தி செயற்திட்டங்களில் நேற்றைய தினம் முதற்கட்டமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முகமாக அவற்றைத் தொடக்கி வைத்தார்...நெடுந்தீவை சென்றடைந்த அமைச்சர் அவர்களை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச செயலர் சிறி, நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் தானியேல் றெக்சியன் (ரஜீவ்), ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) ஆகியோர் வரவேற்றனர்.
முன்பதாக கடற்படையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்பு கண்சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்கள் பொது விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை, முன்பள்ளி, சனசமூக நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல்லை நாட்டி வைத்த அதேவேளை புதிய பாதை போன்றவற்றுக்கான புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தும், மற்றுமொரு புனரமைக்கப்பட்ட பாதையைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காகவும் கையளித்தார்.
இதனிடையே நெடுந்தீவு மக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வரும் குடிநீர்க்கிணறுகளைப் பார்வையிட்ட அவர் அவற்றின் பராமரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீவகத்தின் வேலணை, ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச சபைகளின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக தலா 100 மில்லியன் வீதம் 300 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
அந்தவகையில் நெடுந்தீவிற்கென ஒதுக்கப்பட்ட நிதியினூடாக 42 அபிவிருத்தி செயற்திட்டங்களில் நேற்றைய தினம் முதற்கட்டமாக தொடக்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு மக்கள் கடற்போக்குவரத்தை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் வடதாரகை போன்று புதிய படகொன்றை 40 மில்லியன் ரூபா செலவில் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களது நீண்டகாலமானதும் பிரதான பிரச்சினையாகவுமுள்ள கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு உரியவகையில் தீர்வு காணும் பொருட்டு தற்போது நெடுந்தீவுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் வடதாரகை போன்று புதியதொரு படகை 40 மில்லியன் ரூபா செலவில் அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கிடையில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை, நெடுந்தீவு துறைமுகத்தை வடதாரகை மற்றும் இதர படகுகள் துறைமுகத்திற்கு வரும் வகையில் அப்பகுதியை ஆழப்படுத்தி அழகுபடுத்தும் செயற்திட்டத்தையும் துறைசார்ந்தோர் ஊடாக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.
நெடுந்தீவின் அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இவ்வருட இறுதிக்குள் 42 திட்டங்களையும் இந்நிதியினைக் கொண்டு முன்னெடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தம்முடன் இன்றுகாலை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தீவகத்தின் மேம்பாடு தொடர்பில் தாம் கொண்டுள்ள கரிசனை தொடர்பாகவும் எதிர்காலங்களிலும் இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ள தயாராகவுள்ளதாகவும் தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கடற்படையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட கண்சிகிச்சை முகாம் மூலம் இப்பகுதி மக்கள் நன்மையடையும் அதேவேளை, இதனை ஒழுங்கமைத்த அனைவருக்கும் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்

No comments:
Post a Comment