Monday, June 03, 2013
சென்னை::கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் ராஜினாமா செய்தார். ஜக்மோகன் டால்மியா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் நடந்தது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் ஈடுபட்டதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வலுத்தது.
இதற்கிடையே, ஐ.பி.எல். தலைவராக இருந்து ராஜீவ் சுக்லா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பொருளாளர் மற்றும் செயலாளரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் பி.சி.சி.ஐ.யின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன், ஜக்மோகன் டால்மியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அருண்ஜெட்லி உள்ளிட்ட மேலும் சிலர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஜக்மோகன் டால்மியா பிசிசிஐ-யின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூதாட்ட விசாரணை முடியும்வரை சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருப்பார் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜக்மோகன் டால்மியாவை அருண்ஜெட்லி சிபாரிசு செய்தார் என்பது குறிப்பிட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பிசிசிஐ பொருளாளர் மற்றும் செயலாளரின் ராஜினாமா கடிதங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment