Monday, June 03, 2013
இலங்கை::அன்று (புலி)பயங்கரவாதிகள் செய்த குரூர செயல்களை நாம் நினைவு கூர்வது குரோதம், பகைமையைப் பரப்புவதற்கல்ல; மாறாக நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதவகையில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே சுட்டிக் காட்டுகிறோம்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
இலங்கை::அன்று (புலி)பயங்கரவாதிகள் செய்த குரூர செயல்களை நாம் நினைவு கூர்வது குரோதம், பகைமையைப் பரப்புவதற்கல்ல; மாறாக நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஏற்படாதவகையில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே சுட்டிக் காட்டுகிறோம்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
பெளத்தர்கள் ஒருபோதும் இந்நாட்டில் அடிப்ப டைவாதிகளாவதில்லை. எமது தேரர்களும் அடி ப்படைவாதிகளல்லர். எமது சமூகமும் அடிப் படைவாதமானதல்ல.நாம் எந்த சந்தர்ப் பத்திலும் அடிப்படை வாதிகளாக செய்திகளை வழங்கு வதுமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெலிமட, பொரலந்த ஹீன்நாரங் கொல்ல சிறி சுதர்சனாராம விகாரையில் வாகல்கட, தாத்து மந்திர என்பவற்றை திறந்து வைத்தும், விகாரையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தும் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1818ல் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ புரட்சியைத் தொடர்ந்து 14 வயதிற்கு மேற்பட்ட சகல ஆண்களும் பிரித்தானிய ஏகாதி பத்தியவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
இருந்தும் அவர்களது படுகொலை நடவடிக்கைகளிலிருந்து எஞ்சிய பரம்பரை யில் வந்தவரே விஜேகோன் கெதர சுமண திஸ்ஸ தேரர் ஆவார். இவர் இவ்விகாரைக் கும் இப்பிரதேசத்திற்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். இப்பிரதேசத்திற்கும், இந்நாட்டுக்கும் சேவையாற்றிய இப்பிர தேசத்தை சேர்ந்தவர்களை சிலையாக வடிக்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த வகையில் இந்நாட்டு நீர் மின்சார துறையின் ஸ்தாபகர் விமல சுரேந்திர மற்றும் உருளை கிழங்கு செய்கையின் ஸ்தாபகர் நோமன் குணத்திலக்க உள்ளிட்டோர் இவ்வாறு சிலையாக வடிக்கப்பட்டுள்ளனர். இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய பணியாகும்.
எமது இளம் பராயத்தினர் விகாரை களுடன் இணைந்து நெருங்கிச் செயற் படவேண்டிய காலமிது ஏனெனில் இந் நாட்டின் எதிர்காலம் இன்றைய இளம் பராயத்தினரின் கைகளில் தான் உள்ளது. அதனால் அவர்களை இப்போதிருந்தே நல்வழியில் வளர்த்தெடுக்க வேண்டும். இது எமது பொறுப்பு.
இன்றைய போன்ற ஒரு நாளில் தான் அரந்தலாவ தேரர்கள் படுகொலை சம்பவம் இடம் பெற்றது. அதனை நாம் நினைவுகூர வேண்டும். என்றாலும் இச்சம்பவத்தை சில ஊடகங்கள் மறந்துவிட்டன.
இதனை எமது பிள்ளை களுக் கூறுவது அவசியம். ஏனென்றால் இப்படியான குரூர (புலி)பயங்கரவாத யுகத்தைக் கடந்து தான் நாம் வந்திருக்கின்றோம் என்பதை அவர்களும் அறிந்திருக்கவேண்டும். மாறாக குரோதம் பகைமை பாராட்டு வதற்காக இவற்றை நாம் நினைவுபடுத்து வதில்லை. இவ்வாறான (புலி)பயங்கரவாத நிலமை மீண்டும ஏற்படாத வகையில் எமக்கிடையே இன ஐக்கியத்தை வளர்க்க வேண்டும். இனவாதமோ, மதவாதமோ உயர்த்திப் பிடிக்கக் கூடிய தல்ல. பெளத்தர்கள் என்ற அடிப்படையில் இந்நாட்டில் நாம் சத்தியத்தைத் தேடுவார்கள்.இதனால் தான் பெளத்த மதமும் இந்நாடும் இங்கு பாதுகாக்கப்பட்டி ருக்கின்றது. தேரவாத பெளத்த மதம் குறித்து பெருமையோடு பேசப்படுகின்றது.
இங்குள்ள எதுவும் நிரந்தரமானதல்ல. வாழ்வும் அப்படியானதே. அதனால் நாம் வாழும் குறுகிய காலத்தில் நாட்டிற்கும், சமூகத்திற்கும், சுற்றாடலுக்கும் நன்மை பயப்பவர்களாக வாழ்வோம் என்றார்.
இவ்வைபவத்தில் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன, ஊவா மாகாண முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, மாகாண சபையின் சபைத் தலைவர் ஹேமா ரட்நாயக்கா, ஆளுநர் நந்தா மெத்திவ், எம்.பிக்கள் உதித்த லொக்கு பண்டார, லொஹான் ரத்வத்த உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.




No comments:
Post a Comment