Monday, June 03, 2013
இலங்கை::சிறைச்சாலைகளில் ஆண் உத்தி யோகத்தர்கள் மட்டுமன்றி பெண் உத்தி யோகத்தர்களும் பாரதூரமான மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சர் சந்திரசிறி கஜதீர கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண், பெண் சிறை உத்தியோ கஸ்தர்கள் தங்கள் சமூக பொறுப்புக்களை மறந்து போதைவஸ்து, சிகரட், மதுபானம் போன்ற தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை பணத்திற்காக சிறைச் சாலைக்குள் கடத்திச் சென்று கைதிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறினார். இவர்கள் கையடக்கத் தொலைபேசிகளையும் இவ்விதம் சிறைச்சாலைகளுக்கு கடத்திச் செல்கிறார்கள்.
இவ்விதம் குற்றம் இழைக்கும் ஆண் மற்றும் பெண் சிறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய அதிரடி சோதனையின்போது 52 கையடக்கத் தொலைபேசிகள் சிறைக் கைதிகளின் அறைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சிறைச்சாலையின் அறைகளிலும் கழிவறைகளிலும் மறைத்து வைக்கப்பட்டி ருந்த போதை வஸ்துகளும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டன.
இத்தகைய மோசடிகளை தடுப்பதற்காக தாம் புதிதாக 73 பெண் புலன் விசாரணை உத்தியோகஸ்தர்களுக்கு நியமனம் வழங்கி அவர்களை சகல சிறைச்சாலைகளிலும் நியமிக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இருவாரங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு பொறுப்பான ஒரு பெண் அதிகாரியின் அறையில் 46,000 ரூபா ரொக்கப் பணமும் 8 சாராயப் போத்தல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment