Monday, June 03, 2013
இலங்கை::திருகோணமலை நகரசபையும், அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை::திருகோணமலை நகரசபையும், அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண சபை செயலாளர் சரத் அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை நகரசபைக்கும், அமெரிக்க தூதரகத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
கல்வி தகவல் நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
எனினும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இதேபோன்ற கல்வி நிலையங்களை, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திலும் ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment