Thursday, June 20, 2013
இலங்கை::இந்தியா, இலங்கையில் பிரிவினைவாதத்தை தூண்டும்வகையில் செயற்பட்டு வருவதாக வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் இலங்கையில் இந்தியா பிரிவினைவாதத்தை தூண்டி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக கரு முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை அழைத்து இந்திய மத்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படாவிட்டால் ஆளும் கட்சியிலிருந்து விலக நேரிடும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக 13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியில் இருந்து கொண்டே இவ்வாறு அதிகாரங்களை நீக்க விரும்புவதாகவும் முடியாத சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியை விட்டு விலகி போராடப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால் அது எதிர்காலத்தில் ஆபத்தானதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச நாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரங்களில் இந்தியா தேவையின்றி தலையீடு செய்வதாகவும் இது குறித்த இந்தியா வெட்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment