Thursday, June 20, 2013
சென்னை::இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை தம்பதி தவராஜா, ஜலஜா ஆகியோர் கடந்த மே 25-ந்தேதி சென்னை வந்த போது விமான நிலையத்தில் இருந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.
ரூ.2 கோடி கேட்டு இங்கிலாந்தில் இருந்த தவராஜா மகள் தர்ஷினியிடம் போனில் மிரட்டினர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடலூர் அடுத்த மந்தாரக்குப்பத்தில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்த தவராஜா ஜலஜாவை மீட்டனர். அவர்களை கடத்திய கண்ணன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை இந்திரா அந்தோணிமேரி, பிரபு, மதியழகன், சரவணன், சதீஷ்குமார், இளங்கோ இலங்கையை சேர்ந்த வசந்த் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் கைதான 8 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டலம் கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் பரிந்துரைந்தார். இதை ஏற்று சென்னை போலீஸ் கமிஷனர் 8 குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment