Thursday, June 20, 2013
சென்னை::இலங்கையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய எந்த அகதிகளும் தங்களிடம் முறையிடவில்லை என்று, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான காரியாலயத்தின் அதிகாரி ஒருவர், இந்திய ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர், இதுவரையில் தமிழகத்தில் இருந்து 5000 அகதிகள் வரையில் இலங்கை திரும்பியுள்ளனர்.
2012ம் ஆண்டு ஆயிரத்து 600 அகதிகள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள அதேநேரம், கடந்த 2011ம் ஆண்டில் 1670 பேரும், 2010ம் ஆண்டு 2040 பேரும் இலங்கை திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், கடவுச்சீட்டு வழங்கல் போன்ற சேவைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையகம் மேற்கொள்கின்ற அதேநேரம், நிதி உதவிகளையும் வழங்குகிறது.

No comments:
Post a Comment