Wednesday,June 12, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக்கடசித்தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணித்த வாகன தொடரணி மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலபிட்டிய - மீகெட்டுவத்த பிரதேசத்தில் வைத்தே நேற்று மாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் வாகனங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடி தொழிலுக்குச் சென்றிருந்தபோது அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த மீனவர்கள் சிலரது மரண வீடுகளுக்கு சென்றுக்கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவரின் வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலுக்கு இலக்கான பலப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களான அஜித் அசேல மற்றும் டப்ளியு.சேனாரத்ன ஆகியோர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்
இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் மு

றைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment