Wednesday,June 12, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற் பரப்பில் மற்றுமொரு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவை அண்டிய கடற் பரப்பில் படகு குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு கப்பல்களின் மூலம் குறித்த படகை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோகோஸ் தீவுகளிலிருந்து இந்தக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை குறித்த படகு அவுஸ்திரேலிய தீவுகள் நோக்கி பயணம் செய்ததனை அவதானித்ததாக அந்நாட்டு எல்லைப்பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குறித்த படகைக் காணவில்லை என தெரிவித்துள்ளனர். இந்தப் படகில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்பது தெரியவில்லை என எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment