Tuesday, June 4, 2013

நாட்டின் இறைமைக்கு உலகின் ஏனைய நாடுகள் மதிப்பளிக்க வேண்டும்:பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ்!

Tuesday, June 04, 2013
இலங்கை::நாட்டின் இறைமைக்கு உலகின் ஏனைய நாடுகள் மதிப்பளிக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுயாதீனமானதும், இறைமையுடையதுமான இலங்கை அரசாங்கம் உலகின் ஏனைய நாடுகள் இறைமையை மதிக்க வேண்டுமேன எதிர்பார்ப்பதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க மற்றும் புனர்வாழ்வு முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புலிகளின் பிடியியில் சிக்கியிருந்த 297000 மக்களை மீட்டு அவர்களை மீள் குடியேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் முன்னாள் புலி உறுப்பினர்களக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை சமூகத்துடன் மீள இணைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 28 ஆண்டு கசப்பான யுத்த அனுபவங்களின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் சமாதானத்தை நாட்டில் நிலைநாட்ட முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்கள்N மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசரணைகளுக்கும் சுயாதீன விசாரணைகளுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
பிரித்தானியாவின் இறைமையை இலங்கை மதிப்பதாகவும், பிரித்தானியா இலங்கையின் இறைiமையை மதிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மூலம் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தென்ஆபிரிக்க உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளுக்கு நிகரான பணிகளை இலங்கை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஆற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தென் மற்றும் மத்திய பகுதிகளிலேயே அதிகளவான தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதார காரணிகளுக்காகவே அதிகளவானவர்கள் புகலிடம் கோரி வருவதாக கிறிஸ் நோனீஸ் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் நல்லிணக்கத்தை துரித கதியில் ஏற்படுத்த முடியாது எனவும், வட அயர்லாந்து தென் ஆபிரிக்க போன்ற நாடுகளிலும் இன்னமும் சிற்சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கால வரையறையின் அடிப்படையில் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment