Tuesday, June 04, 2013
இலங்கை::கல்வி நோக்கத்திற்க்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை::கல்வி நோக்கத்திற்க்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
திருகோணமலை நகரசபையுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டிருந்தது.
இந்த உடன்படிக்கை ராஜதந்திர நியதிகளுக்கு புறம்பானது என வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியிருந்தது.
மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இந்த நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டதாக அமெரிக்கத் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பற்றிய அண்மைமய தகவல்களை இந்த வள நிலையங்கள் வழங்கும் என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை நகரசபை மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment