Tuesday, June 4, 2013

திவுரும்பொல பிரதேசத்தில் சீதை அம்மனுக்கு ஆலயம்: ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு!

Tuesday, June 04, 2013
இலங்கை::ஹக்கலை – திவுரும்பொல பிரதேசத்தில் சீதை அம்மனுக்கு ஆலயம் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்திற்கு ராவணா பலய அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
 
அந்த அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ
தேரர் இந்த ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
 
சீதை அம்மனுக்கு ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இராவண மன்னனுக்கு சிலையொன்று நிறுவப்படவேண்டும். ராவண மன்னன் வரலாற்றுடன் எமக்கு முக்கியமான ஒருவர், ராவணனால்தான் சீதை பத்தினி என்ற பெயரை பெற்றார். இராவணன் சீதை பலவந்தப்படுத்தியிருந்தால் அவர் அந்த தகுதியை பெற்றிருக்க மாட்டார்.பல வருடங்களாக சீதையை சிறைவாசம் வைத்திருந்தாலும் அவருக்கு ராவண மன்னன் இடையூறு விளைவித்ததில்லை.
 
எனவே, ராவணம் ஒரு கொள்கையை கடைபிடிப்பவர் என்று புலப்படுவதால், முதலில் அவருக்கே ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
 
பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரம் கொண்ட இந்திய மத்திய பிரதேஷ் பிராந்தியத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங்க சௌவான், இலங்கையில் சீதை அம்மையாருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என்று அண்மையில் தெரிவித்த கருத்துக்கு அமையவே ராவணா பல அமைப்பு தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
 
எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால் நிச்சயமாக சீதையம்மனுக்கு தேவாலயம் அமைக்க திட்டமி;ட்டு;ள்ளதாக மத்திய பிரதேஷ் முதலமைச்சர் தெரிவித்தார்.
 
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் தயானந்த் நிதியத்தின் ஊடாக சீதையம்மன் ஆலயம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment