Wednesday, June 19, 2013

கண்டி - போகம்பறை சிறைச்சாலையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது!

Wednesday, June 19, 2013
இலங்கை::கண்டி - போகம்பறை சிறைச்சாலையை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சிறைச்சாலையிலுள்ள கைதிகள் பல்லேகலே மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.எஸ்.விதானகே கூறினார்.

இதுவரையில் கண்டி - போகம்பறை சிறைச்சாலையிலிருந்த 400 விளக்கமறியல் சந்தேகநபர்கள் பல்லேகலே சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

நகரங்களிலிருந்து சிறைச்சாலைகளை அகற்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment