Wednesday, June 19, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து பேச்சுவார்த்தை!

Wednesday, June 19, 2013
சென்னை::13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்கும் திட்டத்தை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்புக்கள் குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 13ம் திருத்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கும் முரணானது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போது 13ஆவது திருத்த சட்ட விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கின்ற செயற்பாடுகள் குறித்து ஆளமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஷபக்ஷவுடன் 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சு சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் குறிப்பிட்ட சில அதிகாரங்களை திருத்துவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையின் பின்னரே மேற்படி பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment