Wednesday, June 19, 2013
இலங்கை::இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை மாகாண சபை உறுப்பினர் ஜெய விஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இன்றைய அரசியல் நிலைபற்றி விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-
வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் காரியாலயம் திருகோணமலை நகர சபையுடன் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதுடன் தமது நிலையத்தையும் திருமலை நூலகத்தில் அமைத்துள்ளது. இது தேசத்துரோகமான விடயமாகும்.
கூட்டமைப்பின் கையில் நகரசபை இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது தேசத்துரோகமான செயல் மாத்திரமல்ல, புகழ்பெற்ற துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைக்கும் ஆபத்தான விடயம். இலங்கை விவகாரங்களை இங்கிருந்து உளவு பார்ப்பதற்கே இந்த அமெரிக்க நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பினர் அவசரமாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை விவகாரங்களில் இந்தியாவாக இருக்கலாம். ஐக்கிய நாடுகள் சபையாக இருக்கலாம். தலையிட நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவை இல்லாது ஒழிக்கப்பட்ட பின்னரே வடக்கு மாகாண தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இல்லாதவரை தேர்தலை நடாத்த நாம் அனுமதிக்கப் போவதில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி அதிகாரங்களும் பொலிஸ் அதிகாரங்களும் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படுமானால் இந்த நாட்டில் மீண்டும் பழைய நிலையொன்று உருவாகும்.
கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபை தேர்தலில் நின்று வெற்றி பெறட்டும். ஆனால், அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது. வழங்கவும் நாம் தயாராக இல்லை. அவ்வாறு வழங்கும் நிலையொன்று ஏற்பட்டால் வடக்கு, கிழக்கை இணைக்கும்படி கேட்பார்கள். அவ்வாறு இணைக்கப்பட்டால் கிழக்கு, வடக்கிற்கு அடிமையாக வேண்டிய ஒரு நிலை உருவாகும்.
இந்தியா இலங்கையில் உள்ள உள்விவகாரங்களை பயன்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு முற்படுகின்றது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மீது கைவைக்க வேண்டாமென்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டமைப்பினரை அழைத்திருப்பதன் உள் நோக்கமும் அதுதான். இந்தியாவுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றோம். சம்பந்தனைப் பயன்படுத்தி 13ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நீங்கள் நினைப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment