Wednesday, June 5, 2013

வவுனியா ஆயுதமுனையில் கொள்ளை ; இராணுவ வீரர் உட்பட ஐவர் சந்தேகத்தில் கைது!

Wednesday, June 05, 2013
இலங்கை::வவு­னியா நெலுக்­குளம் பிர­தே­சத்தில் வீடொன்­றுக்குள் நுழைந்து துப்­பாக்­கியைக் காட்டி வீட்­டி­லுள்­ள­வர்­களை அச்­சு­றுத்தி நான்கு இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பணத்­தையும் தங்க ஆப­ர­ணங்­க­ளையும் கொள்­ளை­யிட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் இரா­ணுவ வீரர் ஒரு­வ­ரையும் மேலும் நால்­வ­ரையும் கடந்த 2ஆம் திகதி கைது செய்­துள்­ள­தாக வவு­னியா பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைதான சந்­தே­க ­ந­பர்கள் வவு­னியா மற்றும் கல்­க­முவ பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் எனவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து ரி 56 ரைபிள் உட்­பட தங்க ஆப­ர­ணங்கள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கடந்த மே 6ஆம் திகதி வவு­னியா நெலுக்­குளம் பிர­தேசத்தைச் சேர்ந்த வீடொன்றில் துப்­பாக்­கியைக் காட்டி வீட்­டாரை அச்­சு­றுத்தி பணம் மற்றும் தங்க ஆப­ர­ணங்கள் கொள்­ளை­யிட்­டது தொடர்­பாக மேற்­கொண்ட விசா­ர­ணை­களை அடுத்து இச்­சந்­தே­க­ ந­பர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ வீரரே இக்­கொள்­ளையை திட்­ட­மிட்டு நடத்தி­யுள்­ள­தா­கவும் இந்த இரா­ணுவ வீரர் வவு­னியா இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் கட­மை­யாற்றி வரு­வ­தா­கவும் கட­மையின் நிமித்தம் அவருக்கு வழங்கப்­பட்ட துப்­பாக்­கியை இக் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

வவு­னியா குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு கிடைத்த தக­வ­லொன்றையடுத்து மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
பெறுமதிவாய்ந்த புராதனப் பொருட்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தல்; கொட்டாஞ்சேனையைச் சேர்ந்தவர் கைது!
 
புராதன பெறுமதிவாய்ந்த பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தும் நடவடிக்கை தொடர்பில் தொல்பொருள் திணைக்கள பொலிஸ் பிரிவினர் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
 
விமானம் மூலமான பொதிகள் மற்றும் கூரியர் சேவைகள் ஊடாக புராதன பெறுமதியுடைய பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர்.
 
சுற்றுலா வழிகாட்டியாக செயற்படும், இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய, கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
இவரிடமிருந்து புராதன பெறுமதியுடைய சிலைகள், முத்து மாலைகள், மண் அடுப்பு மற்றும் பித்தளையிலான பொருட்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
தொல்பொருள் பெறுமதிமிக்க பொருள் ஒன்றை விமானப் பொதி மூலம் அனுப்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில் தபால் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்தக் கடத்தல் நடவடிக்கை குறித்து தெரியவந்ததாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment