Wednesday, June 5, 2013

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் கே.பி பியதிஸ்ஸவுக்கு மரண தண்டனை!

Wednesday, June 05, 2013
இலங்கை::மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் கே.பி பியதிஸ்ஸவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
 
கேகாலை மேல்நீதிமன்றத்தின் நீதிபதி மேனகா விஜயசுந்தர இத்தீர்ப்பை  இன்று (புதன் கிழமை ) அளித்துள்ளார்.
 
வாகன சாரதியான கே.ஜி. பிரியரத்ன என்பவரை  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்த குற்றச்சாட்டில் அவரை நீதிமன்றம் குற்றவாளியாக இனங் கண்டதையடுத்தே அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே குறித்த சாரதியை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி படுகொலை செய்ததாக அவருக்கு எதிராகக்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
 
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் அவர் பிரதேச சபைத் தலைவராக பதவியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment