Wednesday, June 5, 2013

ரஷ்யாவில் கைதிகளுக்கு மொபைல் போன் கடத்திய பூனை கைது!

Wednesday, June 05, 2013
மாஸ்கோ::ரஷ்யாவில், கைதிகளுக்கு மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்ற பூனையை, சிறை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
 
ரஷ்யாவில், கோமி என்ற பகுதியில் சிறை உள்ளது. ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள இந்த சிறைக்குள், கறுப்பு-வெள்ளை நிற பூனை அடிக்கடி சென்று வந்தது. அதன் கழுத்து பகுதி புடைத்து கொண்டு இருந்தது. சந்தேகமடைந்த சிறை காவலர்கள், அந்த பூனையை பிடித்து சோதித்த போது,
 
அதன் கழுத்து பகுதியில் மொபைல் போன், சார்ஜர், பேட்டரி உள்ளிட்டவை இருந்தன. இந்த பூனையின் மூலம் என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டன, என்பது குறித்த விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment