Wednesday, June 19, 2013
சென்னை::யுத்தம் நிறைவடைந்த பின்னர், முதல் தடவையாக இலங்கையின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது இந்திய அதிருப்தி வெளியிட்டிருப்பதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தன் பின்னர் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, த ஹிந்து பத்திரிகை இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியாவினால் இலங்கையின் அரசியல் அமைப்புக்கு பிரேரிக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கு தமது அதிர்ப்தி வெளியிடப்படும் என்பதுடன், தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் என்றுமில்லாதவாறு இந்தியா இலங்கை மீது அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment