Wednesday, June 19, 2013
இலங்கை::இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரை நாளை ஆஜர்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் மாதம் 6ம் தேதி 5 படகுகளில் சென்ற 25 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டி கைது செய்து இலங்கை ஊர்க்காவல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூன் 19ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைவதையொட்டி, அந்த 25 மீனவர்களும் யாழ்ப்பாணம் மேல்நிலை நீதிமன்ற நீதிபதி பரமராஜா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி, மீனவர்களை வியாழக்கிழமையன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment