Monday, June 17, 2013
ஜெனீவா::பயங்கரவாதிகளின் பிரச்சாரப் பணிகளுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலகப் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்பு தொடர்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகள் தகவல் தொழில்நுட்பத்துறையை பாரியளவில் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத ஆதரவு அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் பயங்கரவாத நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பில் சில தரப்பினர் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தரப்பு பயங்கரவாதிகள் ஒரு விதமாகவும் மற்றுமொரு தரப்பு பயங்கரவாதிகள் வேறு விதமாகவும் நோக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment