Monday, June 17, 2013
சென்னை::இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை::இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தவிர்ப்பதற்காக விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டம் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய இலங்கை கடல் எல்லை அருகில் முன்னெடுக்கப்படுகின்ற ரோந்து சேவைகளை விஸ்தரிப்பதற்கு இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்படும் படகுகளை நிறுத்தி மீண்டும் இந்திய கடற்பரப்பிற்குள் அனுப்பி வைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இதனைத் தவிர இந்திய மீனவர்களின் படகுகளில் நாட்டின் தேசிய கொடிகளை பறக்கவிட வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர மீனவ படகுகளில் பதிவு இலக்கங்களும் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும் என மீனவர்களுக்கு அறிவித்தல் வி
டுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment