Monday, June 17, 2013
இலங்கை::சிலாபம், மாதம்பே பகுதியில் வெளிநாடு ஒன்றில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) இரவு எட்டு மணியளவில் சந்தேகநபர் மாதம்பே - சுதுவெல்ல தோட்டப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பே - சுதுவெல்ல தோட்டப் பகுதியில் உள்ள கடை ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்வதற்கு குழு ஒன்று தயாராவதாக நேற்று இரவு பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மாதம்பே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கடையில் கடந்த 12ஆம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாகவே நேற்று இரவும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது..

திருகோணமலை குச்சவேலி, புடவைக்கட்டு கடற்பகுதியில், சட்டவிரோதமான வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!
திருகோணமலை குச்சவேலி, புடவைக்கட்டு கடற்பகுதியில், சட்டவிரோதமான வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்கள் நேற்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் இந்த மாதம் 26ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment