Sunday, June 23, 2013
இலங்கை::தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கை::தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நாளைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.
அரசியல் தீர்வுத் திட்டத்தை எட்டும் முனைப்புக்களுக்கு மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஏற்கனவே தென் ஆபிரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment