Sunday, June 23, 2013
இலங்கை::தேர்தலுக்கு முன்னர் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!
இலங்கை::தேர்தலுக்கு முன்னர் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு!
தேர்தலுக்கு முன்னர் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. படையதிகாரி ஒருவர் வட மாகாணத்தின் ஆளுனர் பதவியை வகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல்கள் நீதியானதும், சுயாதீனமானதுமான முறையில் நடத்தப்பட வேண்டுமாயின் ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். சிவிலியன் ((புலிகளின் உறுப்பினர்)) ஒருவரே வட மாகாணசபையின் ஆளுனராக நியமிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
வட மாகாணசபையின் ஆளுனர் பதவியை இராணுவ அதிகாரியொருவர் வகித்து வரும் வரையில் அங்கு சுயாதீனாமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்கு மாகாணசபையிலும் இந்த நிலைமை நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படையதிகாரி ஒருவரே ஆளுனர் பதவியை வகித்து வருவதாகவும் இதனால் மாகாணசபை நிர்வாகத்திற்கும் ஆளுனருக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும்::(((புலிகளின் உறுப்பினர் ஆளுனராக வேண்டுமாம்))) தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
இதையெல்லாம் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல் புள்ளப்பூச்சிகளிடம் சொல்லி என்ன பயன்
???? உலகமகா நடிப்புடா சாமி ....நேரத்திற்கு தகுந்தமாதிரி பேச எங்கதான்
கற்றுகொண்டார்களோ ???





No comments:
Post a Comment