Wednesday, June 26, 2013

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவது அதிகரித்துள்ளது: அரசாங்கத் தகவல் திணைக்களம்!

Wednesday, June 26, 2013
இலங்கை::இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து  தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவது அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 350 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தமிழகத்திலுள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
 
2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1600 பேர் இலங்கைக்குத் திரும்பியுள்ளதாக  ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத் தரவுகள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன், நாடு திரும்பியவர்களுக்கு பாதுகாப்புத் தொடர்பான அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நாடு திரும்ப விரும்புபவர்கள் வசிக்கவுள்ள பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே, அவர்களை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் திருப்பியனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  
 

No comments:

Post a Comment