Wednesday, June 26, 2013
இலங்கை::இந்தோனேசியா முதலீட்டாளர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பத்துடன் உள்ளனர் என இலங்கையிலுள்ள இந்தோனேசியா தூதுவராலயத்தின் முதலாவது செயலாளர் அல்பட் அப்டி தெரிவித்தார்.
நேற்று (25.6.2013) மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதி நிதிகளை மட்டக்களப்பிலுள்ள அதன் அலுவலகத்தில் வைத்து சந்தித்த போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தோனேசியா தூதுவராலயத்தின் முதலாவது செயலாளர் அல்பட் அப்டி நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பிலுள்ள மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதி நிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

No comments:
Post a Comment