Wednesday, June 26, 2013

புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவ உடைமையாக்குவதற்கு நடவடிக்கை!

Wednesday, June 26, 2013
இலங்கை::புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவ உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
 
புலிகள் பயன்படுத்திய அனைத்து சொத்துக்களையும் இராணுவ உடைமையாக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
அதன்படி புலிகளின் காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களாக இருந்த காணிகள், பயிற்சிக்காக பயன்படுத்திய இடங்கள், வீடுகள் என்பவற்றை அரச உடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  இராணுவ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
 
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் புலிகளுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வாகனங்கள், வங்கிகளின் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள் என்பன அரச உடைமையாக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் புலிகள் பயன்படுத்திய காணிகள், வீடுகள் என்பவற்றையும் இராணுவ உடைமையாக்க கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment