Wednesday, June 26, 2013

அளுத்கம ரயில் நிலையம் அருகில் வேனொன்றுடன் ரயில் மோதியமை தொடர்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது!

Wednesday, June 26, 2013
இலங்கை::அளுத்கமை தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடரூந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
 
சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபை சாலைக்கு குறுக்காக உள்ள வீதியில் சிற்றூர்ந்து ஒன்று, நயனாகுமாரி தொடரூந்துடன் மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் நாகொடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொசொன் வெளிச்சக் கூடுகளை கண்டுகளிக்கச் சென்றவர்களே இவ்வாறு அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்...
அளுத்கம ரயில் நிலையம் அருகில் வேனொன்றுடன் ரயில் மோதியமை தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் L.A.R.ரத்நாயக்க தெரிவித்தார்.
 விபத்தில் நேற்று ஐவர் உயிரிழந்திருந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்
அத்தியட்சகருமான புத்திக்க சிறிவர்தன கூறினார்.
 தொடம்கொட பகுதியில் இருந்து யாத்திரை சென்ற குழுவினரே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.
இதேவேளை, விபத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றிரவு பிரதேசவாசிகள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment