Wednesday, June 26, 2013

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை: புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

Wednesday, June 26, 2013
இலங்கை::இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் தடுத்து வைக்கப்படவில்லை என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய  புலி உறுப்பினர்கள் 810 பேர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் கைதிகள் கிடையாது எனவும், கொலை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
பெரும் எண்ணிக்கையிலான  புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள் தொடர்பில்ழ ஆதாரங்கள் உடைய புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதனை மனித உரிமை மீறலாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment