Tuesday, June 18, 2013

பிழைப்பிற்காக மட்டும் குரல்கொடுக்கும் தமிழ்நாட்டுச் சினமாக்காரர்!


Tuesday, June 18, 2013
இலங்கை::ஒரு மனிதனின் மரணம் என்ற வகையில் மட்டும் மணிவண்ணனின் மரணம் வருந்தத்தக்கது. அதற்காக அவர், இவரைப் போன்றவர்கள் இலங்கை தமிழ் மக்களின் மீட்போர், மனித குலத்தின் விடிவிற்காக பாடுபட்ட தியாகிகள், ‘மாவீரர்கள்’ என்று புகழ்பாடும் அளவிற்கு இவர்கள் ஒன்றும் மாமனிதர்கள் அல்ல.
 
இலங்கை தமிழ் மக்களின் விடிவிற்காக அகிம்சாவழியிலும், ஆயும் ஏற்திய போராட்ட வடிவத்தினூடும் போராடின பல தமிழ அரசியல் அமைப்புக்கள், விடுதலை இயக்கங்கள். இதனை தனித்து புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் செய்தன, செய்கின்றன என்று விழுந்த வளத்திற்கு குறிசுடும் பார்வையையே தமிழ் சினமாக்காரர் கொண்டுள்ளனர்.
 
அதிலும் சீமான் போர்வாளைத் தூக்கிய பின்பு இப்போக்கு மேலும் அதிகரித்துள்ளது. இக்குழாத்தில் ஒரு கறிக்குதவாத மீன்களில் மணிவண்ணனும் ஒருத்தர். கூடவே இவரைப்போல் பலரையும் பட்டியல் இடலாம். அப்படி பட்டியல் இட இவர்கள் யாரும் உத்தமர்களோ, சரியான அரசியல் பார்வையுடையவர்களோ அல்ல. சிறப்பாக புலம் பெயர் தேசத்து டாலர்களுக்காக வாலை ஆட்டும் ஜீவராசிகள் மட்டுமே இவர்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிரபாகரன் என்று ஒரு ‘மாவீரன்’ இருந்தான் இவன்தான் இலங்கை தமிழ் மக்களின் மீட்போன்.
 
பிரபாகரனை துதிபாடினால் தங்கள் பிழைப்பு நன்றாக ஓடும், கூடவே சிறிய விளம்பரமும் கிடைக்கும் என்பது மட்டுமே. அதுவும் 1980 களில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள், இவர்களின் குரல் வளை புலிகளாலேயே நசுக்கப்பட்டது என்பதை பார்க்க விரும்பாவதவர்கள் இவர்கள். தமிழ் நாட்டின் பல்வேறு அகதிகள் முகாம்களில் உள்ள  இலங்கை தமிழரின் நலன்களுக்காக எச்சில் கையால் கூட காகம் கலைக்காதவர்கள இவர்கள்;. சரி இவற்றை விடுவோம் தமிழ் நாட்டு மக்களின் நலன்களைப்பற்றி பேசாதவர்கள், போராடாதவர்கள் இவர்கள்.
 
இவர்களின் மரணம் சாதாரண ஒரு மனிதனின் மரணத்திறகுள் அடக்க முடியுமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இவற்றையும் தாண்டி பெண்களின் சேலையை உருவும் 3ம் தர சினமாக்களைத் தவிர வேறு எதனைத்தான் இந்த துச்சாதனர்கள் சினிமாவாக எடுத்து மக்களுக்கு சேவை செய்து விட்டனர். கூடவே ஆண் மேலாதிக்கதின் வன்புணர்வு உச்சத்தைத் தவிர இவர்கள் வேறு எதனை தமிழ் சினிமா உலகில் செய்து விட்டனர். மணிவண்ணன் வகையாறாக்கள் சுத்த வேஸ்ர். இவரையும் தாண்டி சில நல்லவர்கள் தமிழ் சினிமா உலகில் இல்லாமலும் இல்லை.
(சாகரன்)

No comments:

Post a Comment