Wednesday, June 5, 2013

மாகாண சபை இணைப்பதனை தடுப்பதற்கான சட்டமூலம் கொண்டுவருவது தொடர்பில் பேச்சு!

Wednesday, June 05, 2013
இலங்கை::மாகாண சபை இணைப்பதனை தடுப்பதற்கான சட்டமூலம் கொண்டுவருவது தொடர்பில் பேச்சு.
 
மாகாண சபை இணைப்பதனை தடுப்பதற்கான சட்டமூலம் கொண்டுவருவது தொடர்பில் நேற்று இடம்பெற்ற அரசாங்க கட்சி தலைவர்களது கூட்டத்தில் நெடுநேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது.
 
இதன்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலம் கொண்டுவரும் போது சகல மாகாண சபைகளினதும் ஆதரவினை பெற்றுக்கொள்ள நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களை மாற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வடக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், மாகாண சபைகளை இணைப்பதை தவிர்ப்பது தொடர்பில் நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment