Wednesday, June 05, 2013
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து, ஜூன் 2ல், நாட்டுப்படகில் அகஸ்டின், முருகன், செல்வம், முனிய
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து, ஜூன் 2ல், நாட்டுப்படகில் அகஸ்டின், முருகன், செல்வம், முனிய
சாமி, நல்லதம்பி, பூரணம், மற்றொரு முனியசாமி ஆகிய
மீனவர்கள், மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில், படகில் இயந்திரம் பழுதாகியது;
காற்றின் வேகத்திற்கு படகு திசைமாறி, இலங்கை நெடுந்தீவு அருகே, கக்கடதீவில்
மீனவர்கள் தஞ்சமடைந்தனர்.
இதுகுறித்து, இலங்கை மீனவர்கள், பாம்பன் மீனவர் சங்க
தலைவர் அருளானந்தத்திற்கு, தகவல் கொடுத்தனர். நேற்று காலை, ராமேஸ்வரம் மீன்துறை
அனுமதியுடன், 3 படகில், மீனவர் குழுவினர் தேடிச் சென்றனர். பின், இலங்கையில் இருந்த
மீனவர்களை, படகுடன் மீட்டு, நேற்று இரவு 9.30 மணிக்கு, ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ""படகில் பழுது ஏற்பட்டதால், படகு திசை மாறி
சென்றது; இலங்கையில் தஞ்சமடைந்தோம். அங்குள்ள மீனவர்கள், உணவு கொடுத்தனர்'
என்றார்.

No comments:
Post a Comment