Wednesday, June 05, 2013
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்ரேலிய உயரதிகாரிகளுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கும் இடையே, இந்த கலந்துரையாடல் நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்த, ஆட்கடத்தலில் ஈடுப்படுவோருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஆட்கடத்தல் நடவடிக்கையானது தற்போது மிகவும் இலாபம் தரும் சட்டவிரோத செயலாக காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment