Monday, June 24, 2013

இந்திய சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதலிடம்!!

Monday, June 24, 2013
சென்னை::இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களில், தமிழகத்தில்தான் அதிகமான விபத்துக்குள் நடந்திருக்கின்றன.
 
கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 4,40,042 சாலை விபத்துக்குள் நிகழ்ந்திருக்கின்றன. இதில், 1,39,091 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தேசிய குற்றவியல் தகவல் கழகம் (என்சிஆர்பி) வெளியிட்ட அறிக்கையில், சாலை விபத்துக்களில் உயிரிழந்த 1,39,091 பேரில், 1,18,533 பேர் ஆண்களாவர்.
இதில், தமிழகத்தில் மட்டும் 67,757 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 16, 175 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அடுத்த இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. இங்கு கடந்த 24,478 சாலை விபத்துக்களில், 15,109 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திரத்தில், 39,344 சாலை விபத்துக்களில், 14,966 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரம், தில்லி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment