Monday, June 24, 2013

கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன்!

Monday, June 24, 2013
ராமநாதபுரம்::மதசார்பற்ற கொள்கை உடையவர்கள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும்'' என, ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் முகைதீன் கூறினார். அவர்
கூறியதாவது:
 
தமிழகத்தில், மாவட்டந்தோறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பாராட்டி, பரிசு தொகை வழங்குகிறோம். தி.மு.க., வுடன் கூட்டணி நீடித்து வருகிறது. நாங்கள் சந்தர்ப்பவாதத்தில் சேரவில்லை. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., "சீட்' கேட்கவில்லை. மதசார்பற்ற கொள்கை உடையவர்கள் மட்டுமே நாட்டை அளவேண்டும்.
 
தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க., வையும், கேரளாவில் காங்., கட்சியையும் நம்புகிறோம். கச்சத்தீவு பிரச்னைக்கு நாங்கள் தான் முதல் குரல் கொடுத்தோம். இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மீண்டும் பெறுவதின் மூலம், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. வயதானவர்கள் அதிகம் கொல்லப்படுகின்றனர். இதை போலீசார் மட்டுமே தடுத்து விட முடியாது. மக்களிடம் கடவுள் பக்தி இருந்தால் தான், இதுபோன்ற பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண முடியும், என்றார்.

No comments:

Post a Comment