Monday, June 24, 2013

ரி.56 ரக துப்பாக்கி ஒன்றுடன் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த புலிகளின் இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர், வாழைச்சேனை காவற்துறையினரால் கைது!

Monday, June 24, 2013
இலங்கை::ரி.56 ரக துப்பாக்கி ஒன்றுடன் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த  புலிகளின் இரண்டு ச
ந்தேக நபர்களில் ஒருவர், வாழைச்சேனை காவற்துறையினரால் நேற்று  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, துப்பாக்கியுடன் 30 தோட்டக்கள், ஒரு ரவைக் கூடும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தப்பிச் சென்ற மற்றைய நபர்,  புலிகளின் அமைப்பின் முக்கிய நபராக செயற்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் இராணுவத்தினர் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்றவர் அல்ல எனவும் தெரியவந்துள்ளது.
 
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, தப்பிச் சென்ற நபருடையது என கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் காவற்துறையினரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வாழைச்சேனை காவற்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment