Monday, June 24, 2013

தமிழ் நாடு – வெலிங்டன் இராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த இரண்டு இலங்கை படை அதிகாரிகள் மீளழைப்பு!

Monday, June 24, 2013
இலங்கை::தமிழ் நாடு – வெலிங்டன் இராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த இரண்டு இலங்கை படை அதிகாரிகள் மீளழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அங்கு பயிற்சி வழங்குகின்றமைக்கு எதிராக கடந்த நாட்களில் தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அ

எனினும் அவர்கள் பயிற்சி பெற வேண்டிய பாடவிதானங்கள், வெலிங்டன் இராணுவ கல்லூரியை தவிர, இந்தியாவில் வேறு கல்லூரிகளில் இல்லாத நிலையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
வர்களை இந்தியாவில் வேறு கல்லூரிக்கு மாற்ற இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

No comments:

Post a Comment