Monday, June 24, 2013

புலிகளின் பணத்திற்காக பொம்ம லாட்டம் அடிக்கும் சில புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எது அரசியல், எது விளையாட்டுத்துறை என்பதை கூட இலகுவில் இனம்கண்டு கொள்ள முடியாத மூடர்கள்!


Monday, June 24, 2013
இலங்கை::புலிகளின் பணத்திற்காக பொம்ம லாட்டம் அடிக்கும் சில புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எது அரசியல், எது விளையாட்டுத்துறை என்பதை கூட இலகுவில் இனம்கண்டு கொள்ள முடியாத மூடர்கள்!
 
புலிகளின் பணத்திற்காக பொம்ம லாட்டம் அடிக்கும் சில புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எது அரசியல், எது விளையாட்டுத்துறை என்பதை கூட இலகுவில் இனம்கண்டு கொள்ள முடியாத மூடர்களாக இருப்பது உண்மையிலேயே நாம் வேதனைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
 
இலங்கை கிரிக்கட் அணியினர் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் சம்பியன் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட போது இங்கிரு ந்து புலம்பெயர்ந்து சென்ற சில தமிழர்கள் கார்டிப் நகர மைதானத்திற்கு முன்னால் ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் எங்கள் நாட்டைச் சேர்ந்த தேசப் பற்றுடைய சிங்கள, தமிழ், முஸ்லிம் கிரிக்கட் ரசிகர்கள் அவர்களை அடித்து விரட்டியதன் மூலம் விளையாட்டில் அரசியலை புகுத்துவது தவறு என்ற பாடத்தை இந்த துவேசம் படைத்தவர் களுக்கு கற்றுக் கொடுத்தனர்.
 
விளையாட்டுத்துறையில் எதிர்ப்பைத் தெரிவிக் கும் முகமாக வன்முறைகளில் ஈடுபடுவது தவறு என்பதற்கு 1972ம் ஆண்டில் மேற்கு ஜேர்மனியின் மியுனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது இடம்பெற்ற இரத்தக்களரி குறித்து நாம் அன்று வேதனைப்பட்டோம். இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு வந்த இஸ்ரேலிய தேசத்தின் 11 விளையாட்டு வீர, வீராங்கனைகளும் அவர்களின் போதனா சிரியர்களும் கறுப்பு செப்டம்பர் தீவிரவாத குழுவினால் படுகொலை செய்யப்பட்டனர்.
 
இந்த சம்பவத்தில் ஒரு ஜேர்மன் பொலிஸ் உத்தியோகத்தரும் 5 கறுப்பு செப்டம்பர் தீவிர வாதிகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனிய மக்களுக்கும் ஏனைய அரபு மக்களுக்கும் தீங்கிழைப்பதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் விளைவாகவே இஸ்ரேலிய விளை யாட்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று, அன்று ஒரு சாரார் வாதிட்டனர்.
இந்த வாதத்தை எவரும் ஏற்றுக் கொள்ள வில்லை. இஸ்ரேலுக்கு எதிராக உங்கள் எதிர் ப்பை தெரிவிக்க வேண்டுமானால் இராணுவ ரீதியில் அதனை வெளிப்படுத்த வேண்டுமே ஒழிய அப்பாவி இஸ்ரேலிய மக்களை படு கொலை செய்வது தவறு என்று முழு உலகமே இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்தது.
 
கறுப்பு செப்டம்பர் தீவிரவாதிகளைப் போன்றே புலி பயங்கரவாதிகளும் இல ங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்தம் செய்து அதனை தோல்வியடையச் செய்வதற்கு பதில், சிங்கள கிராமங்களுக்கு சென்று அப்பாவி பொது மக்களை கடந்த காலத்தில் படுகொலை செய் தனர்.
 
அரந்தலாவையில் புத்த பிக்குகளும், கெப்பத்தி கொல்லாவையில் சாதாரண மக்களும் அனுராதபுரம் சிறிமாபோதிக்கு அருகில் நூற்றுக் கணக்கான பெளத்தர்களும் எல்.ரி.ரி.ஈ. பயங்கர வாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்திலும் எங்கள் நாட்டைச் சேர்ந்த சுயமாக சிந்திக்கக்கூடிய சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் இப்படுகொலைகளை கண்டித்தனர்.
 
வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ள சில தமிழர்கள் ஆயுதம் தாங்கி போராடும் வீரர்கள் அல்ல. அவர்களை மற்றவர்களின் தயவில் வாழ் ந்து கொண்டிருக்கும் பொறுப்பற்றவர்கள் என்று நாம் அழைத்தாலும் அதில் தவறு இருக்க முடியாது. அந்தளவுக்கு அவர்கள் மானத்தையும், ரோசத்தையும் இழந்து டொலர் பேய்களாக மாறி, தங்கள் எஜமானர்கள் இடும் கட்டளையை நிறைவேற்றி எமது தாய் நாட்டுக்கே அவப் பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.
 
வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இனிமேலாவது விளையாட்டுத்துறை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? என்பதை புரிந்து கொண்டு செயற்படுவது அவர்களுக்கு நல் லது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் தொட ர்ந்தும் வெளிநாடுகளில் சகல வசதிகளுடன் வாழ வேண்டுமானால் இலங்கையில் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், இராணுவத்தினர் மக்களை துன்புறுத்துகிறார்கள் என்றெல்லாம் பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்து இலங் கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அதன் வீடியோ படங்களை தொலைக்காட்சி நிலையங்கள் மூலமும் பத்திரிகைகள் மூலமும் பிரசுரிப்பதுடன் தங்கள் கடமை முடிவடைந்து விட்டது என்ற நிம்மதியில் இருப்பார்கள்.
 
அரசியல் ரீதியில் இது எங்கள் நாட்டுக்கு எதிரான ஒரு துர்ப்பிரசாரமாகும். இதனை நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொண் டாலும் விளையாட்டு வீரர்கள் மீது தங்கள் அராஜகத்தை காண்பித்து ஆர்ப்பாட்டங்களை செய்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே, இந்தத் தடவை எமது ஆதரவாளர் களிடம் இருந்து வாங்கிக் கட்டிய இந்த புலம்பெயர்ந்த சில தமிழர்கள் இனிமேலும் அத்தகைய முட்டாள்தனமான செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள் என்று நாம் நம்புகிறோம்.
 
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட உலகிலுள்ள அனைவருக்கும் அரசியலில் ஈடுபடுவதற்கு பூரண சுதந்திரம் இருக் கிறது. ஆனால், அந்த சுதந்திரத்தை விளை யாட்டுத்துறையிலும் அவர்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment