Monday, June 24, 2013

'நமது கிராமங்களை நாமே பாதுகாப்போம்' கந்தளாயில் விஷேட செயலமர்வு:கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நிமல் பண்டார!

Monday, June 24, 2013
இலங்கை::ஆசியா மன்றத்தின் அனுசரனையில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கந்தளாய் தலைமைப் பொலிஸ் - சமூக பொலிஸ் பிரிவின் பங்கேற்புடன் சிவில் பாதுகாப்பு குழுக்களின் நிர்வாக பிரதிநிதிகளுக்கான 'நமது கிராமங்களை நாமே பாதுகாப்போம்' எனும் தொனியில் விஸேட செயலமர்வொன்று சமீபத்தில் கந்தளாய் தலைமைப் பொலிஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைமைப் பிரதிநிதிகள் சுமார் 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.19 கிராம நிலதாரி பிரிவிலுள்ள மூன்று சமூகங்களையும் சேர்ந்த பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். கிராமங்களில் அன்றாடம் நடைபெறும் குற்றச்செயல்கள, அடிப்படைப் பிரச்சனைகள், தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
அதேவேளை கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு குழுக்களின் இணையத்திற்கான நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டன. தலைவராக முன்னால கந்தளாய் பிரதேச சபையின் தவிஸாளர் கௌரவ கிரி பண்டா அவர்களும் உப தலைவராக திரு ஜே.எம்.அஸார்(BA) அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
 
கந்தளாய் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி திரு. நிமல் பண்டார(CI) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கந்தளாய் பிராந்திய பொலிஸ் அதிகாரி திரு.நுவான் அத்துக்கோரல(SP) அவர்களும் விஸேட அதீதியாக கந்தளாய் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி திரு.பண்டிதரத்ன(ஐP) அவர்களும் மற்றும் இன்னும் பல அரச உத்தியோகத்தர்களும்இ பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment